திங்கள், 12 ஜனவரி, 2015

அப்பக்கோவைக் கீரை

அப்பக்கோவைக் கீரை கொடி வகையை சேர்ந்தது.இதற்கு அறியகோவை என்ற வேறுபெயரும் உண்டு. இக்கீரை ஈரபசையுள்ள இடங்களில் செழித்து வளரும். இக்கீரை வேலிகளில் படர்ந்து இருக்கும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம். இதன் இலைகளை கசக்கினால் ஒருவித வாசனை வரும். இதன் பூக்கள் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மருத்துவப் பயன்கள்:
   இக்கீரையில் கால்சியம், பஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன.
    கோவை கீரைக்கு உரிய மருத்துவக் குணங்கள் அனைத்தும் இக்கீரைக்கு உண்டு. சிறுவர்களுக்கு வரும் சளி, இருமல் ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. குழ்ந்தைகளுக்கு சளி, இருமல் இருப்பின் அப்பகோவை கீரையின் சாற்றை பாலில் கலந்து சங்கில் ஊற்றி கொடுப்பார்கள்.இயற்கை மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

அப்பக்கோவை கீரை ஒரு பயனுள்ள கீரை...!

1 கருத்து:

  1. அப்பக்கோவை இலையை அரைத்து சிறு குழந்தைகளுக்குக் குளிக்கும் போது தெவளையாகப் பயன்படுத்துவார்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகளை பதிவு செய்க: