சனி, 24 அக்டோபர், 2015

காக்கரட்டான் கீரை

   

 காக்கரட்டான் கீரை, கொடி வகையை சேர்ந்தது. இதனை காக்கணம், சன்குப்பூ, மாமுனி என்ற வேறு பெயர்கள் கொண்டும் அழைப்பர்.
     காக்கரட்டன் கீரை புதர்கள், வேலிகள் போன்ற இடங்களில் படர்ந்து இருக்கும். இதன் அணைத்து பாகங்களும் பூ, காய், விதை, வேர் ஆகியவையாவும் மருத்துவ குணங்கள் உடையவை.
காக்ரட்டான் கீரையில் இரண்டு வகைகள் உள்ளது அவை வெள்ளை காகரட்டான், நீல காக்ரட்டான். இதில் வெள்ளை காக்ரட்டான் கீரையே அதிக நன்மைகள் உடையது. இக்கீரை உணவுக்காக பயன்படுத்தப்படுவதில்லை.

மருத்துவ பயன்கள்:
  காகரட்டான் கீரை சளி மற்றும் கபத்தை அகற்றும் தன்மையுடையது. காக்ரட்டான் கீரை கடும் சளி தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு கண்கன்ட மருந்து.
காக்ரட்டான் கீரையின் வேரை அரைத்து பாலில் கலந்து தொடந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும்.
காக்ரட்டான் கீரை சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

திங்கள், 12 அக்டோபர், 2015

அம்மான் பச்சரிசிக் கீரை

அம்மான் பச்சரிசிக் கீரை தோட்டங்களிலும் வாய்கால் ஓரங்களிலும் கொடி போல் படர்ந்து இருக்கும். பக்கத்திற்கு ஒன்றாக இலைகளையும், இலைகளுக்கு நடுவே சிறு காய்களையும் உடையது. இச்செடியை உடைத்தல் வெண்மையான பால் வரும்.

மருத்துவப் பயன்கள்:
  இக்கீரை நிறைய சத்துக்களை கொண்டது.அம்மான் பச்சரிசிக்  சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இக்கீரை வாய்புண், வாய் மற்றும் உதடு வெடிப்பு, மலத்துவாரத்திலுள்ள வெடிப்புகள் போன்றவற்றை குணமாக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வேண்டிய அளவு பால் சுரப்பை தரும். இம்மூலிகை 'எம்பெருமான் பச்சரிசி' என்று சித்தர்களால் சிறப்புடன் அழைகப்படுகிறது.

அம்மான் பச்சரிசிக் கீரை ஓர் அரிய கீரை.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

கரிசலாங்கண்ணிக் கீரை

 கரிசலாங்கண்ணிக் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அறிய கீரை. கரிசலாங்கண்ணிக் கீரையின் வேறு பெயர்கள் பொற்கொடி, மஞ்சள்பாவை, பொற்றலைக்கரப்பான் ஆகும். கரிசலாங்கண்ணிக் கீரையின் இலைகள் நீண்டு கூர்மையாக இருக்கும். கரிசலாங்கண்ணிக் கீரையில் நன்கு வகைகள் உண்டு அவை மஞ்சள், நீளம், சிவப்பு, வெள்ளை ஆகும். இதில் வெள்ளை கரிசலாங்கண்ணி வெள்ளை பூக்களையும் மஞ்சள் கரிசலாங்கண்ணி மஞ்சள் பூக்களையும் பூக்கும். கரிசலாங்கண்ணிக் கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.

மருத்துவக் பயன்கள்:
         கரிசலாங்கண்ணிக் கீரையில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி, சி ஆகியவை நிறைந்து உள்ளது.
         கரிசலாங்கண்ணிக் கீரையை அன்றாடம்  உனவில் சேர்த்து வந்தால் மஞ்சள் காமாலை , கல்லீரல் வீக்கம், போன்ற நோய்களை குணப்படுத்தும் அறிய ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை பச்சையாக இடித்து சாறு எடுத்து வேலைக்கு இரண்டு அவுன்சு வீதம் காலை மாலை 2 வேளைகளிலும் 7 நாட்கலுக்கு தவறாமல் உட்கொண்டால் மஞ்சள் காமாலை குணமாகும். கரிசலாங்கண்ணி தைலத்தை தலை மயிரில் தடவி வந்தால் தலை முடி கருத்து செழித்து வளரும். முடி உதிர்வதையும் , இளநரை
ஏற்படுவதையும் தடுக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரை உடல் நலத்திற்க்கு உகந்த கீரை.....!