காக்கரட்டான் கீரை, கொடி வகையை சேர்ந்தது. இதனை காக்கணம், சன்குப்பூ, மாமுனி என்ற வேறு பெயர்கள் கொண்டும் அழைப்பர்.
காக்கரட்டன் கீரை புதர்கள், வேலிகள் போன்ற இடங்களில் படர்ந்து இருக்கும். இதன் அணைத்து பாகங்களும் பூ, காய், விதை, வேர் ஆகியவையாவும் மருத்துவ குணங்கள் உடையவை.
காக்ரட்டான் கீரையில் இரண்டு வகைகள் உள்ளது அவை வெள்ளை காகரட்டான், நீல காக்ரட்டான். இதில் வெள்ளை காக்ரட்டான் கீரையே அதிக நன்மைகள் உடையது. இக்கீரை உணவுக்காக பயன்படுத்தப்படுவதில்லை.
மருத்துவ பயன்கள்:
காகரட்டான் கீரை சளி மற்றும் கபத்தை அகற்றும் தன்மையுடையது. காக்ரட்டான் கீரை கடும் சளி தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு கண்கன்ட மருந்து.
காக்ரட்டான் கீரையின் வேரை அரைத்து பாலில் கலந்து தொடந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும்.
காக்ரட்டான் கீரை சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நல்ல தகவல்,இந்த மூலிகைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்தேன், நன்றி.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி
நீக்கு