- சிறிய வெங்காயத்தை அரைத்து அதை அதை தலையில் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.
- தயிரை தலையில் தேய்த்து அது ஊறிய பிறகு சீக்காய் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தீரும்.
- கருவேப்பிலையை பால் விட்டு அரைத்து தலையில் தடவி பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலையை கழுவி வந்தால் முடி உதிர்வு தீரும்.
- முட்டையுடன் நட்டு வெங்காயத்தை சேர்த்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்துவர முடி உதிர்வு நீங்கும்.
- கருவேப்பிலை எண்ணையை தினமும் தலையில் தேய்த்து வர முடி செழித்துவளரும் முடி உதிர்வு குறையும்.
இங்கு பயனுள்ள மருத்துவக் குறிப்புக்கள்,உடலை பராமறிக்கும் வழிமுறைகள்,காய்கறிகள்,கீரைகள்,பழங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் போன்ற தகவல்கள்...
வியாழன், 26 நவம்பர், 2015
முடி உதிர்வதை தடுக்க
இளநரையை போக்க
- பொதுவாக இளநரை வருவதற்கு காரணம் வைட்டமின் பி சத்து குறைவினால் தான். இதற்கு வைட்டமின் பி நிறைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
- திரிபலா மூலிகை தூள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதை கலையில் வெறும் வயிற்றில் நீரில் கலந்து பருகி வந்தால் இளநரையை தடுக்கலாம்.
- இள நரைக்கு ஒரு சிறந்த மூலிகை கரிசலாங்கண்ணி கீரை இதை காயவைத்து பொடியாக்கி காய்ச்சி தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி வந்தால் இள நரை நீங்கும்
- தினமும் கருவேப்பிலையை துவையல் செய்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் இளநரை நீங்கும்.
- மருதாணி, கருவேப்பிலை, வேப்பிலை இவற்றை அரைத்து பொடியாக்கி தேங்கைஎன்னையில் தடவி வந்தால் இள நரை நீங்கும்.
- நல்லெண்ணெய்யுடன் நெல்லிக்காய் சாற்றை கலந்து தடவிவந்தால் இள நரை நீங்கும்.
பேன் தொல்லை தீர
- இரவு தூங்கும் போது மருதாணி பூவை தலையில் வைத்து கொண்டால் பேன்கள் தொல்லை நீங்கும்
- பொதுவாக ஷாம்பூ கு பதில் சீக்காய் பயன்படுத்துவது பேன் தொல்லையில் இருந்து விடுபடவுதவும்.
- வசம்பை அரைத்து தலையில் தடவி பிறகு அரைமணிநேரம் கழித்து குளித்து வந்தால் பேன்தொல்லை அகலும்.
- வேப்பம் பூவை அரைத்து தலையில் தடவி வந்தால் பேன் தொல்லை அகலும்.
- கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து பிறகு தேங்காய் எண்ணையை காய்ச்சி அதில் காய்ந்த கருவேப்பிலையை போட்டு காய்ச்சி தலையில் தடவி வந்தால் பேன் வரவே வராது.
- வெள்ளை மிளகாய் பாலில் ஊறவைத்து அரைது பிறகு திளைக்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தயையை கழுவி வந்தால் பெண் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
- துளசி இலையை அரைத்து வடிகட்டி இரவில் ஊறவைத்து பிறகு காலையில் சீக்காய் தேய்த்து குளித்து வந்தால் பேன் தொல்லை அகலும்.
செவ்வாய், 24 நவம்பர், 2015
கறிவேப்பிலை கீரை
இதனை ஆங்கிலத்தில் என்று அழைப்பர்.
மருத்துவப் பயன்கள்:
கறிவேப்பிலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நம்மில் பலர் கறிவேப்பிலையை உண்ணுவதில்லை, உணவு உண்ணும்போது கறிவேப்பிலையை ஒதிக்கிவிடிகிறோம். கறிவேப்பிலையை பற்றி நாம் நன்கு அறிந்திருந்தால் இப்படி செய்யமாட்டோம். கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி ,சி ஆகியவை உள்ளன. கறிவேப்பிலை பசியை தூண்டும் சக்தியுடையது. கறிவேப்பிலையை தேங்காய்எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி கருப்பாக வளரும். இரத்த சோகை உள்ளவர்கள் கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
கறிவேப்பிலை கீரை ஒரு பயனுள்ள கீரை .....!
குப்பைமேனி கீரை
குப்பை மேனி கீரை செடி வகையை சேர்ந்தது. குப்பைமேனி செடி குப்பைகளில் 2அடி வரை வளரும் தன்மையுடையது. குப்பைமேனி கீரையின் வேறு பெயர்கள் பூனை வணங்கி, அரிமஞ்சரி ஆகும். நம் நாட்டின் அணைத்து பகுதிகளிலும் இகீரை தானாக வளர்கிறது. குப்பைமேனி கீரையின் இலைகள் வட்டமாக இருக்கும்.
பூனை, கீரி போன்ற பிராணிகள் பாம்பு, தேள் போன்ற விஷமுள்ள உயிர்களை கொன்றுவிட்டு, அதன் விஷம் உடம்பில் எறாமளிருக்க குப்பைமேனி இலை மற்றும் வேரை சாப்பிடுவதால் இக்கீரை பூனை வணங்கி என்று அழைகப்படுகிறது. குப்பைமேனி அருகே பூனை சென்றால் இதன் வாசம் பட்டு மயங்கி நிற்கும், அதனால் இக்கீரைக்கு பூனை வணங்கி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவ பயன்கள்:
குப்பைமேனி கீரையில் வைட்டமின்களும் சில தாது உப்புகளும் உள்ளன.
தீராத தலைவலி மற்றும் விஷக்கடி போன்ற நோய்களுக்கு கிராமமக்கள் இக்கீரையை பயன்படுத்துகின்றனர். குப்பைமேனி கீரை பல மறுத்துவ குணங்கள் நிறைந்த கீரை. சித்த மருத்துவத்தில் குடல் புழுக்களை அழிக்க இகீரை பயன்படுதப்படுகிறது. குப்பைமேனி கீரையின் சாறு தேள் கொட்டிய இடத்தில் இட்டால் வலி குறையும். குப்பைமேனி கீரைக்கு தோல் நோய்களை போக்கும் சக்தி உண்டு. குப்பைமேனி கீரை, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து தோல் நோய் இருக்கும் இடத்தில் தடவி ஊறவைத்து பிறகு குளித்து வந்தால் தோல் நோய்கள் அகலும். குப்பைமேனி கீரை மந்த்ரிகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளி, 6 நவம்பர், 2015
அரைக் கீரை
மருத்துவப் பயன்கள்:
அரை கீரையில் பல அறிய சத்துக்கள் உள்ளன. இகீரையில் கால்சியம்.பொட்டாசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன.
சளி,இருமல் குணமாக்கும். பசியை தூண்டும் சக்தி இதற்கு உண்டு. இக்கீரை கண் சம்பன்தமான நோய்களை குணப்படுத்த வல்லது. பிரசவித்த பெண்கள் பலம் பெறவும், குழந்தைகளுக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கவும் இக்கீரை பயன்படும். நரம்புதளர்ச்சி உள்ள வலிபர்களுக்கு இக்கீரை சிறந்த மருந்து. வாத நோய்,உடல், மூட்டு நோய் உள்ளவர்கள் இக்கீரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நோய் குணமாகும். நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும், சக்தியும் தரக்கூடியது. இக்கீரையை தினமும் உண்டு வந்தால் உடலுக்கு அழகும் வலுவும் கிடைக்கும்.
அரைக் கீரை ஒரு சிறப்புமிக்க கீரை.....!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)