வியாழன், 26 நவம்பர், 2015

முடி உதிர்வதை தடுக்க



  • சிறிய வெங்காயத்தை அரைத்து அதை அதை தலையில் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.
  • தயிரை தலையில் தேய்த்து அது ஊறிய பிறகு சீக்காய் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தீரும்.
  • கருவேப்பிலையை பால் விட்டு அரைத்து தலையில் தடவி பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலையை கழுவி வந்தால் முடி உதிர்வு தீரும்.
  • முட்டையுடன் நட்டு வெங்காயத்தை சேர்த்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம்  கழித்து குளித்துவர முடி உதிர்வு நீங்கும்.
  • கருவேப்பிலை எண்ணையை தினமும் தலையில் தேய்த்து வர முடி செழித்துவளரும் முடி உதிர்வு குறையும். 

இளநரையை போக்க



  •    பொதுவாக இளநரை வருவதற்கு காரணம் வைட்டமின் பி சத்து குறைவினால் தான். இதற்கு வைட்டமின் பி நிறைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
  •  திரிபலா மூலிகை  தூள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதை கலையில் வெறும் வயிற்றில் நீரில் கலந்து பருகி வந்தால் இளநரையை தடுக்கலாம்.
  • இள நரைக்கு ஒரு சிறந்த மூலிகை கரிசலாங்கண்ணி கீரை இதை காயவைத்து பொடியாக்கி காய்ச்சி தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி வந்தால் இள நரை நீங்கும் 
  • தினமும் கருவேப்பிலையை துவையல் செய்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் இளநரை நீங்கும்.
  • மருதாணி, கருவேப்பிலை, வேப்பிலை இவற்றை அரைத்து பொடியாக்கி தேங்கைஎன்னையில் தடவி வந்தால் இள நரை நீங்கும்.
  • நல்லெண்ணெய்யுடன்  நெல்லிக்காய் சாற்றை கலந்து  தடவிவந்தால் இள நரை நீங்கும்.

பேன் தொல்லை தீர



  •               இரவு தூங்கும் போது மருதாணி பூவை தலையில் வைத்து கொண்டால் பேன்கள் தொல்லை நீங்கும் 
  •               பொதுவாக ஷாம்பூ கு பதில் சீக்காய் பயன்படுத்துவது பேன் தொல்லையில் இருந்து விடுபடவுதவும்.
  •               வசம்பை அரைத்து தலையில் தடவி பிறகு அரைமணிநேரம் கழித்து குளித்து வந்தால் பேன்தொல்லை அகலும்.
  •               வேப்பம் பூவை அரைத்து தலையில் தடவி வந்தால் பேன் தொல்லை அகலும்.
  •               கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து பிறகு தேங்காய் எண்ணையை காய்ச்சி அதில் காய்ந்த கருவேப்பிலையை போட்டு காய்ச்சி தலையில் தடவி வந்தால் பேன் வரவே வராது.
  •               வெள்ளை மிளகாய் பாலில் ஊறவைத்து அரைது பிறகு திளைக்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தயையை கழுவி வந்தால் பெண் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  •             துளசி இலையை அரைத்து வடிகட்டி இரவில் ஊறவைத்து பிறகு காலையில் சீக்காய் தேய்த்து  குளித்து வந்தால் பேன் தொல்லை அகலும்.


செவ்வாய், 24 நவம்பர், 2015

கறிவேப்பிலை கீரை

கறிவேப்பிலை, கீரை வகையை சேர்ந்தது. கறிவேப்பிலையை உணவில் (குழம்பு,ரசம்,பொறியல்.....)  போன்றவற்றில் சேர்த்துவிட்டால் மணமுள்ளவையாக இருக்கும். நமது அன்றாட உணவில் கறிவேப்பிலையை சேர்த்து வருகிறோம். கறிவேப்பிலை வேம்பின் இனத்தை சேர்ந்தது. கறிவேப்பிலை காடுகளிலும் , வீடுகளிலும் மரமாக வளரும். வேப்பிலையை விட கருமையாக இருப்பதால் கருவேப்பிலை என்று அழைக்கப்படுகிறது.
இதனை ஆங்கிலத்தில் என்று அழைப்பர்.

மருத்துவப் பயன்கள்:
   கறிவேப்பிலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நம்மில் பலர் கறிவேப்பிலையை உண்ணுவதில்லை, உணவு உண்ணும்போது கறிவேப்பிலையை ஒதிக்கிவிடிகிறோம். கறிவேப்பிலையை பற்றி நாம் நன்கு அறிந்திருந்தால் இப்படி செய்யமாட்டோம். கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி ,சி ஆகியவை உள்ளன. கறிவேப்பிலை பசியை தூண்டும் சக்தியுடையது. கறிவேப்பிலையை தேங்காய்எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி கருப்பாக வளரும். இரத்த சோகை உள்ளவர்கள் கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கறிவேப்பிலை கீரை ஒரு பயனுள்ள கீரை .....!

குப்பைமேனி கீரை

குப்பை மேனி கீரை செடி வகையை சேர்ந்தது. குப்பைமேனி செடி குப்பைகளில் 2அடி வரை வளரும் தன்மையுடையது. குப்பைமேனி கீரையின் வேறு பெயர்கள் பூனை வணங்கி, அரிமஞ்சரி ஆகும். நம் நாட்டின் அணைத்து பகுதிகளிலும் இகீரை தானாக வளர்கிறது. குப்பைமேனி கீரையின் இலைகள் வட்டமாக இருக்கும்.
   பூனை, கீரி போன்ற பிராணிகள் பாம்பு, தேள் போன்ற விஷமுள்ள உயிர்களை கொன்றுவிட்டு, அதன் விஷம் உடம்பில் எறாமளிருக்க குப்பைமேனி இலை மற்றும் வேரை சாப்பிடுவதால் இக்கீரை பூனை வணங்கி என்று அழைகப்படுகிறது. குப்பைமேனி அருகே பூனை சென்றால் இதன் வாசம் பட்டு மயங்கி நிற்கும், அதனால் இக்கீரைக்கு பூனை வணங்கி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவ பயன்கள்:
  குப்பைமேனி கீரையில் வைட்டமின்களும் சில தாது உப்புகளும் உள்ளன.
 தீராத தலைவலி மற்றும் விஷக்கடி போன்ற நோய்களுக்கு கிராமமக்கள் இக்கீரையை பயன்படுத்துகின்றனர். குப்பைமேனி கீரை பல மறுத்துவ குணங்கள் நிறைந்த கீரை. சித்த மருத்துவத்தில் குடல் புழுக்களை அழிக்க இகீரை பயன்படுதப்படுகிறது. குப்பைமேனி கீரையின் சாறு தேள் கொட்டிய இடத்தில் இட்டால் வலி குறையும். குப்பைமேனி கீரைக்கு தோல் நோய்களை போக்கும் சக்தி உண்டு. குப்பைமேனி கீரை, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து தோல் நோய் இருக்கும் இடத்தில் தடவி ஊறவைத்து பிறகு குளித்து வந்தால் தோல் நோய்கள் அகலும். குப்பைமேனி கீரை மந்த்ரிகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளி, 6 நவம்பர், 2015

அரைக் கீரை

அரைக் கீரை செடிவகையை சேர்ந்தது. இச்செடி அரையடி முதல் ஒரு அடி வரை கிளைவிட்டு வளரும். இக்கீரை அறுக்க அறுக்க வளரும் தன்மையுடையது. இக்கீரைக்கு அறு கீரை,கிள்ளுக் கீரை போன்ற வேறு பெயர்க்களும் உண்டு. இதன் இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறியதாக இருக்கும். இக்கீரை மேல் நிறம் பச்சையாகவும் அடிபாகம் மெல்லிய செந்நிறத்தோடும் தோன்றும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.

மருத்துவப் பயன்கள்:
  அரை கீரையில் பல அறிய சத்துக்கள் உள்ளன. இகீரையில் கால்சியம்.பொட்டாசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன.
  சளி,இருமல் குணமாக்கும். பசியை தூண்டும் சக்தி இதற்கு உண்டு. இக்கீரை கண் சம்பன்தமான நோய்களை குணப்படுத்த வல்லது. பிரசவித்த பெண்கள் பலம் பெறவும், குழந்தைகளுக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கவும் இக்கீரை பயன்படும். நரம்புதளர்ச்சி உள்ள வலிபர்களுக்கு இக்கீரை சிறந்த மருந்து. வாத நோய்,உடல், மூட்டு நோய் உள்ளவர்கள் இக்கீரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நோய் குணமாகும். நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும், சக்தியும் தரக்கூடியது. இக்கீரையை தினமும் உண்டு வந்தால் உடலுக்கு அழகும் வலுவும் கிடைக்கும்.

அரைக் கீரை ஒரு சிறப்புமிக்க கீரை.....!

சனி, 24 அக்டோபர், 2015

காக்கரட்டான் கீரை

   

 காக்கரட்டான் கீரை, கொடி வகையை சேர்ந்தது. இதனை காக்கணம், சன்குப்பூ, மாமுனி என்ற வேறு பெயர்கள் கொண்டும் அழைப்பர்.
     காக்கரட்டன் கீரை புதர்கள், வேலிகள் போன்ற இடங்களில் படர்ந்து இருக்கும். இதன் அணைத்து பாகங்களும் பூ, காய், விதை, வேர் ஆகியவையாவும் மருத்துவ குணங்கள் உடையவை.
காக்ரட்டான் கீரையில் இரண்டு வகைகள் உள்ளது அவை வெள்ளை காகரட்டான், நீல காக்ரட்டான். இதில் வெள்ளை காக்ரட்டான் கீரையே அதிக நன்மைகள் உடையது. இக்கீரை உணவுக்காக பயன்படுத்தப்படுவதில்லை.

மருத்துவ பயன்கள்:
  காகரட்டான் கீரை சளி மற்றும் கபத்தை அகற்றும் தன்மையுடையது. காக்ரட்டான் கீரை கடும் சளி தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு கண்கன்ட மருந்து.
காக்ரட்டான் கீரையின் வேரை அரைத்து பாலில் கலந்து தொடந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும்.
காக்ரட்டான் கீரை சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

திங்கள், 12 அக்டோபர், 2015

அம்மான் பச்சரிசிக் கீரை

அம்மான் பச்சரிசிக் கீரை தோட்டங்களிலும் வாய்கால் ஓரங்களிலும் கொடி போல் படர்ந்து இருக்கும். பக்கத்திற்கு ஒன்றாக இலைகளையும், இலைகளுக்கு நடுவே சிறு காய்களையும் உடையது. இச்செடியை உடைத்தல் வெண்மையான பால் வரும்.

மருத்துவப் பயன்கள்:
  இக்கீரை நிறைய சத்துக்களை கொண்டது.அம்மான் பச்சரிசிக்  சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இக்கீரை வாய்புண், வாய் மற்றும் உதடு வெடிப்பு, மலத்துவாரத்திலுள்ள வெடிப்புகள் போன்றவற்றை குணமாக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வேண்டிய அளவு பால் சுரப்பை தரும். இம்மூலிகை 'எம்பெருமான் பச்சரிசி' என்று சித்தர்களால் சிறப்புடன் அழைகப்படுகிறது.

அம்மான் பச்சரிசிக் கீரை ஓர் அரிய கீரை.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

கரிசலாங்கண்ணிக் கீரை

 கரிசலாங்கண்ணிக் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அறிய கீரை. கரிசலாங்கண்ணிக் கீரையின் வேறு பெயர்கள் பொற்கொடி, மஞ்சள்பாவை, பொற்றலைக்கரப்பான் ஆகும். கரிசலாங்கண்ணிக் கீரையின் இலைகள் நீண்டு கூர்மையாக இருக்கும். கரிசலாங்கண்ணிக் கீரையில் நன்கு வகைகள் உண்டு அவை மஞ்சள், நீளம், சிவப்பு, வெள்ளை ஆகும். இதில் வெள்ளை கரிசலாங்கண்ணி வெள்ளை பூக்களையும் மஞ்சள் கரிசலாங்கண்ணி மஞ்சள் பூக்களையும் பூக்கும். கரிசலாங்கண்ணிக் கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.

மருத்துவக் பயன்கள்:
         கரிசலாங்கண்ணிக் கீரையில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி, சி ஆகியவை நிறைந்து உள்ளது.
         கரிசலாங்கண்ணிக் கீரையை அன்றாடம்  உனவில் சேர்த்து வந்தால் மஞ்சள் காமாலை , கல்லீரல் வீக்கம், போன்ற நோய்களை குணப்படுத்தும் அறிய ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை பச்சையாக இடித்து சாறு எடுத்து வேலைக்கு இரண்டு அவுன்சு வீதம் காலை மாலை 2 வேளைகளிலும் 7 நாட்கலுக்கு தவறாமல் உட்கொண்டால் மஞ்சள் காமாலை குணமாகும். கரிசலாங்கண்ணி தைலத்தை தலை மயிரில் தடவி வந்தால் தலை முடி கருத்து செழித்து வளரும். முடி உதிர்வதையும் , இளநரை
ஏற்படுவதையும் தடுக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரை உடல் நலத்திற்க்கு உகந்த கீரை.....!

வியாழன், 3 செப்டம்பர், 2015

குப்பை கீரை

குப்பை கீரை செடி வகையை சேர்ந்தது. தானாக ஆங்காங்கே முளைத்து வளரும் தன்மையுடையது. வயல் வரப்புகளில் , சாலை ஓரங்களில் இக்கீரையை கானலாம். குப்பை இருக்கும் இடங்களில் இக்கீரை செழித்து வளர்வதால் இதனை குப்பை கீரை என்று அழைகிறார்கள்.
   குப்பை கீரை சாம்பல் நிறத்தில் இருக்கும். குப்பை கீரையில் வெளிரிய சிவப்பு நிறத்தில் பூக்கள் இருக்கும். குப்பை கீரை பாற்பதற்கு தண்டு கீரை போல் இருக்கும் ஆனால் அக்கீரையை போல் பசுமையாக இருக்காது. குப்பை கீரையை வீட்டினில் பயிரிடலாம்.

மருத்துவ பயன்கள்:
   குப்பை கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துகள் அதிகமாக உள்ளன.
   குப்பை கீரையில் நார்சத்து அதிகமாக உள்ளது எனவே இக்கீரையை மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நல்லது. இகீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. குப்பை கீரையை பசுகளுக்கு கொடுத்தல் பால் அதிகமாக சுரக்கும்.    

வியாழன், 16 ஜூலை, 2015

ஆதொண்டை கீரை

     
 ஆதொண்டை கீரை, கொடி வகையை சேர்ந்தது. தடிப்பான இலைகளை கொண்டது. துளிர்விடும் பொழுது மஞ்சள் நிறமாகவும் முற்றிய இலைகள் பச்சை நிறத்திலும் இருக்கும். இக்கீரைக் கொடி வேலிகளில் படர்ந்து வளரும் தன்மையுடயது. இதன் காய்கள் இதன் இலை வடிவிலேயே இருக்கும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.

மருத்துவப் பயன்கள்:
  இகீரையில் கால்சியம்,பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன. 
ஆதொண்டை கீரை வாத நோய் மற்றும் ஒற்றை தலைவலியுடன் கூடிய மூக்கடைப்பு ஆகிய நோய்களை விரைவில் குணப்படுத்தும். சிரணக் கோளாறுகளை சீர் செய்யும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. "ஆதொண்டை கீரை தலைவலி ஆற்றுமே" என்பது சித்தர் வாக்கு.

ஆதொண்டை கீரை நன்மை மிக்க கீரை....!

சனி, 6 ஜூன், 2015

ஆரைக் கீரை

ஆரைக் கீரைக்கு  "நீர் ஆவாரை" என்ற மற்றொரு பெயரும் உண்டு. இக்கீரை நீரோடைகள், வாய்க்கால்,எரி குட்டைகள் போன்ற இடங்களில் தன்னிச்சையாக வளரக்கூடியது.தண்ணீர் இல்லையென்றால் இக்கீரை அழிந்து விடும்.இக்கீரை வயல்களில் பயிர்களுக்கு இடையில் களையாக வளர்ந்து இருக்கும்.இக்கீரை இரண்டு முதல் மூன்று அங்குலம் வரை வளரக்கூடியது. இதன் தண்டு மெலிதாக இருக்கும். இக்கீரையில் அதிக எண்ணெய் பசை இருப்பதால் இதன் மேல் தண்ணீர் ஒட்டாது. ஒரு காம்பில் நான்கு இலைகளுடன் காட்சி அளிக்கும்.இதன் இலைகள் பச்சை நிறத்தில் மெலிதாக இருக்கும். இக்கீரை பூக்காது.

மருத்துவ பயன்கள்:
  இகீரையில் கால்சியம்,பொட்டடாசியம்,இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி , சி ஆகியவை உள்ளன. இக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும், வெப்பத்தை போக்கும். இக்கீரை உள்ளத்திற்கு அமைதி அளிக்கும், உடலுக்கு வலிமையும், சக்தியும் அளிக்கும்.கீரை இனத்திலேயே அதிக ருசியும் அதிக சத்துகளும் கொண்ட கீரை இது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இக்கீரையை உண்டு வந்தாள் நோய் குறையும்.

நீராரைக் கீரை நோய் தீர்க்கும் கீரை...!

செவ்வாய், 12 மே, 2015

கண்டங்கத்திரிக் கீரை

கண்டங்கத்திரி கீரை செடி இனத்தை சேர்ந்தது. இச்செடி காடுகளில் அதிகமாக வளரும். கண்டங்கத்திரி கீரையை ஆடு, மாடுகள் சாப்பிடாது. இக்கீரைக்கு "முள்ளுகாய்கீரை" என்ற வேறு பெயரும் உண்டு. இக்கீரையின் தழை மற்றும் காய்களில் நிறைய முட்கள் காணப்படும்.

மருத்துவக் பயன்கள்:
  கண்டங்கத்திரி கீரை ஆஸ்துமா, சளி போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கண்டங்கத்திரி கீரையின் இலை சாற்றை அமனுக்கு எண்ணையுடன் கலந்து கல்வெடிப்புகளுக்கு தடவினால் வெடிப்பு குணமாகும். கண்டங்கத்திரி கீரை சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.
கண்டங்கத்திரி கீரையை கொண்டு துவையல் செய்யலாம். இதன் காய்களை பறித்து முட்களை அகற்றி குழம்பு வைத்து சாப்பிடலாம். கண்டங்கத்திரி கீரை சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கண்டங்கத்திரி கீரை ஒரு சிறந்த கீரை...!

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

கீழாநெல்லி கீரை

கீழாநெல்லி கீரை எல்லா இடங்களிலும் தன்னிச்சையாக வளரகூடியது. கீழாநெல்லி கீரை மேடுபாங்கான இடங்களில், பொதுவாக மழைக்  காலங்களில் செழித்து வளரும். கீழாநெல்லி கீரை சிறு காய்களையும் சிறு இலைகளையும் உடையது. கீழாநெல்லி கீரையின் வேறு பெயர்கள் "கீழ்காய் நெல்லி","கீழ்வாய் நெல்லி" ஆகியவை ஆகும். கீழாநெல்லி கீரை ஒரு அடி முதல் இரண்டு அடி வரை வளரும் தன்மையுடையது.

மருத்துவ பயன்கள்:
  கீழாநெல்லி கீரையில் வைட்டமின் "சி" மிக அதிகமாக உள்ளது. இதில் மற்ற வைட்டமின்களும் உள்ளன. கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள் ,மஞ்சள் காமாலை, ரத்தசோகை போன்ற நோய்களுக்கு கீழாநெல்லி கீரை ஒரு சிறந்த மருந்து.
 கீழாநெல்லி கீரையும் கரிசலாங்கண்ணி கீரையும் சமஅளவு எடுத்து சுத்தம் செய்து அம்மியில் அரைத்து, தினசரி பசும்பாலுடன் கலந்து காலை, மாலை இரு வேலைகளிலும் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மேற்குறிய நோய்கள் அனைத்தும் குணமாகும். கீழாநெல்லி கீரையை உடலில் தேய்த்து ஊற வைத்து பிறகு குளித்தல் அரிப்பு வராது.

கீழாநெல்லி கீரை நோய் தீர்க்கும் கீரை..!

திங்கள், 6 ஏப்ரல், 2015

காசினி கீரை

காசினி கீரையில் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து உள்ளன. காசினி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் மேலோங்கும். காசினிக் கீரை புளிச்சை கீரை வகையை சேர்ந்தது.

மருத்துவ பயன்கள்:
  காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ,பி,சி ஆகியவைகள் உள்ளன.
  ஜீரண கோளாறு,பித்தப்பை நோய், ரத்த சோகை, மற்றும் கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணபடுத்தும் வல்லமை உடையது என்று யுனானி மருத்துவம் சொல்கிறது.
 உடலில் எந்த இடத்தில் வீக்கம் எற்பட்டிருந்தலும் அவீகத்தை குணப்படுத்தும்
ஆற்றல் கொண்டது கசினிக்கீரை.
   காசினிக் கீரை இலை மற்றும் வேரை பொடி பாணமாக்கி  டீ,காபிக்கு பதிலாக பருகலாம் 

செவ்வாய், 3 மார்ச், 2015

குத்துப்பசலைக் கீரை

குத்துப்பசலைக்  கீரை ஒரு சிறு படர் செடியாகும். குத்துப்பசலைக்  கீரை தரையில் படரும் தன்மையுடையது. குத்துப்பசலைக்  கீரை பொதுவாக வெப்பப் பிரதேசங்களில் பயிர்செய்யப்படும். இகீரையின் இலைகள் நீர் பிடிப்புடன் இருக்கும். குத்துப்பசலைக்  கீரையின் இலைகள் எதிர் எதிராக அமைந்திருக்கும். குத்துப்பசலைக்  கீரையின் இலைகள் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இந்தியாவின் அணைத்து பகுதிகளிலும் இக்கீரை காணப்படும்.

மருத்துவப் பயன்கள்:
  குத்துப்பசலைக்  கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, மக்னிசியம்,புரதச் சத்து, நர் சத்து, ஆக்சாலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை அதிக அளவில் உள்ளன.
  பசலை கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் வலுவுடன் இருக்கும். குத்துப்பசலைக்  கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இக்கீரையை தொடர்ந்து உண்டால் நோய்கள் தோன்றாது.
  குத்துப்பசலைக்  கீரைக்கு பசியை தூண்டிவிடும் சக்தி உண்டு. ரத்த சோகை நோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.  குத்துப்பசலைக்  கீரை அதிக ரத்த அழுத்தத்தை போக்கும். குத்துப்பசலைக்  கீரை மலச்சிக்கலுக்கு தீர்வாக விளங்குகிறது. இக்கீரை உடல் வெப்பத்தை தணிக்கும்.

 குத்துப்பசலைக்  கீரை உடல் நலத்தை காக்கும் கீரை...!

திங்கள், 16 பிப்ரவரி, 2015

கடுகுக் கீரை

கடுகு நம் நாட்டில் பல இடங்களில் பயிர் செய்யப் படுகிறது. இக்கீரை செடி வகையை சேர்ந்தது. கடுகு செடி சுமார் நான்கு அடி உயரம் வரை வளரக்கூடியது. இக்கீரை மென்மையாகவும் பசுமை நிறத்துடனும் பார்பதற்கு அழகாக இருக்கும்.இக்கீரை கிராமங்களில் எளிதாக கிடைக்கும். ஒரிசா, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இக்கீரை அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.

மருத்துவ குணங்கள்:
 கடுகுக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்து உள்ளன. இக்கீரை பசியை தூண்டும். வயிற்று பெருமல், மந்தம் முதலியவற்றை போக்கும் ஆற்றல் கொண்டது. உடல் நலத்தை காக்கும் ஒரு அறிய கீரை இது.இக்கீரையை பொரியலகவோ, பச்சடியாவோ, கூட்டாகவோ தயிருடன் சேர்த்து உண்ணலாம். இக்கீரை சீரணச் சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

உடல் நலத்தை காக்கும் ஒரு அறிய கீரை....!

திங்கள், 12 ஜனவரி, 2015

அப்பக்கோவைக் கீரை

அப்பக்கோவைக் கீரை கொடி வகையை சேர்ந்தது.இதற்கு அறியகோவை என்ற வேறுபெயரும் உண்டு. இக்கீரை ஈரபசையுள்ள இடங்களில் செழித்து வளரும். இக்கீரை வேலிகளில் படர்ந்து இருக்கும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம். இதன் இலைகளை கசக்கினால் ஒருவித வாசனை வரும். இதன் பூக்கள் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மருத்துவப் பயன்கள்:
   இக்கீரையில் கால்சியம், பஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன.
    கோவை கீரைக்கு உரிய மருத்துவக் குணங்கள் அனைத்தும் இக்கீரைக்கு உண்டு. சிறுவர்களுக்கு வரும் சளி, இருமல் ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. குழ்ந்தைகளுக்கு சளி, இருமல் இருப்பின் அப்பகோவை கீரையின் சாற்றை பாலில் கலந்து சங்கில் ஊற்றி கொடுப்பார்கள்.இயற்கை மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

அப்பக்கோவை கீரை ஒரு பயனுள்ள கீரை...!

சனி, 3 ஜனவரி, 2015

அகத்திக் கீரை

       

அகத்திக் கீரை நம் நாட்டில் நிறையக் கிடைக்கிறது. அகத்தி செடி மரம் போல் வளரக்கூடியது. இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.அகத்தி செடி வெள்ளை அல்லது சிவப்பு நிறப் பூக்களை கொண்டது.

மருத்துவக் குணங்கள்:
     அகத்திக் கீரையில் கால்சியம் ,பாஸ்பரஸ்,வைட்டமின் பி,சி ஆகியவை மிகுதியாக உள்ளன.'பெப்டிக் அல்சர்'என்று அழைக்கப்படும் வயிற்றுபுண் மற்றும் குடல் புண்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அகத்தி கீரையை நன்கு கழுவி அதன் அளவில் நான்கு மடங்கு வெங்காயம் சேர்த்து குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.அகத்தி கீரை வாய்புண்ணை எளிதில் குணப்படுத்தும். போதிய தாய்ப்பால் சுரக்காமல் உள்ள தாய்மார்களுக்கு போதிய அளவில் பால் சுரக்க வைக்கும் சக்தி இக்கீரைக்கு உண்டு.
அகத்தி கீரை ஒரு அற்புதமான கீரை!